பாஜக ஒரு மோசடி கட்சி; அரசியலுக்காக எதையும் செய்வார்கள் - மம்தா பானர்ஜி சாடல்

பாஜக ஒரு மோசடி கட்சி; அரசியலுக்காக எதையும் செய்வார்கள் - மம்தா பானர்ஜி சாடல்

மம்தா பானர்ஜி

பாஜக அரசியலுக்காக எதையும் செய்வார்கள் என்று மம்தா பானர்ஜி சாடியுள்ளார்.

 • Share this:
  பாஜக ஒரு மோசடி கட்சி என்றும், அரசியலுக்காக எதையும் செய்வார்கள் என்றும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சாடியுள்ளார். குடியுரிமைச் சட்டத் திருத்தம், தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்ட சட்டங்களை தங்கள் கட்சி எதிர்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

  குடிமக்களின் விதியை பாஜக தீர்மானிக்க முடியாது என்று கூறிய அவர், மக்களே அதனை தீர்மானிக்கட்டும் என்றார். மேற்குவங்கம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, குப்பை போல பொய்களை அள்ளி வீசியதாகவும் மம்தா சாடியுள்ளார். அமித்ஷா கூறியபடி தொழிற்சாலைகளில் மேற்குவங்கம் பூஜ்ஜியத்தில் இல்லை என்ற மம்தா, நாட்டிலேயே சிறுகுறு தொழிலில் முதலிடத்தில் உள்ளதாக கூறினார்.

  Also read: எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் கட்சி தொடங்கும் ரஜினிகாந்த்?

  மேலும் கிராமபுற சாலைகள் அமைப்பதில் மாநில அரசு தோல்வியடைந்ததாக கூறிய அமித்ஷாவின் புகார்களை மறுத்த மம்தா பானர்ஜி, மத்திய அரசு தரவுகளின்படி நாட்டிலேயே மேற்குவங்கம் முதலிடத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: