தமிழகத்தில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கும் நலத்திட்ட பணிகள்

தமிழகத்தில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கும் நலத்திட்ட பணிகள்

பிரதமர் மோடி

விழுப்புரம் - தஞ்சாவூர் - திருவாரூர் வரையிலான மின்மயமாக்கப்பட்ட ஒரு வழி ரயில் பாதையையும் பிரதமர் தொடக்கி வைக்கிறார்.

  • Share this:
சென்னையில் வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்க பணியை, பிரதமர் மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார்.

காலை 11 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று தமிழகத்தில் முடிவுற்ற பணிகளை தொடக்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட விரிவாக்கம் மற்றும் சென்னை கடற்கரை முதல் அத்திப்பட்டு வரையிலான 4-வது ரயில் வழித்தடத்தை தொடங்கி வைக்கிறார்.

அத்துடன், விழுப்புரம் - தஞ்சாவூர் - திருவாரூர் வரையிலான மின்மயமாக்கப்பட்ட ஒரு வழி ரயில் பாதையையும் பிரதமர் தொடக்கி வைக்கிறார்.

மேலும், கல்லணை கால்வாய் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டம், சென்னை இந்திய தொழில்நுட்ப கழக டிஸ்கவரி வளாகம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டுகிறார். இதையடுத்து, அர்ஜூன் எம்.பி.டி., MK-IA ரக கவச வாகனத்தை ராணுவத்திடம் ஒப்படைக்கிறார்.
Published by:Vijay R
First published: