ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கொரோனா இல்லாத புத்தாண்டை வரவேற்க... நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!

கொரோனா இல்லாத புத்தாண்டை வரவேற்க... நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!

புத்தாண்டு

புத்தாண்டு

நமக்கு இருக்கும் சமூகப் பொறுப்பினை உணர்ந்து சுய கட்டுப்பாடுகளை கடைபிடித்து கொரோனா இல்லாத புத்தாண்டை வரவேற்க ஆயத்தமாவோம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அதுபோலவே, சீனாவில் பரவி வரும் பிஎஃப்.7 வைரஸும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. இதனால் கொரோனா இந்தியாவில் பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளன. இந்த சூழலில்தான் 2023 புத்தாண்டை வரவேற்கத் தயாராகிவிட்டோம். சென்னையில் மெரினா உள்பட முக்கிய இடங்களில் புத்தாண்டை வரவேற்க மக்கள் இப்போதே ஆயத்தமாகிவிட்டனர்.

தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இருப்பினும் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதால் கொரோனா பரவல் ஏற்படும் அச்சம் இருக்கத்தான் செய்கிறது.

அரசு கட்டுப்பாடுகள் விதிக்கவில்லை என்றாலும் கூட முன்னெச்சரிக்கையாக நமக்கு நாமே சுய கட்டுப்பாடுகள் விதித்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் சுகாதார வல்லுநர்கள். பொது இடங்களில் நெருக்கமாகக் கூடி புத்தாண்டை வரவேற்பதைக் காட்டிலும் வீடுகளில் இருந்தபடி வரவேற்பது நல்லது, ஒருவேளை பொது இடங்களில் கூடினால் கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுங்கள் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.

நமக்கு இருக்கும் சமூகப் பொறுப்பினை உணர்ந்து சுய கட்டுப்பாடுகளை கடைபிடித்து கொரோனா இல்லாத புத்தாண்டை வரவேற்க ஆயத்தமாவோம்.

First published:

Tags: New Year 2023