காவலர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அறிவிப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த சீமான்

சீமான்

காவலர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அறிவிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்திய முதல்வர் ஸ்டாலினுக்கும், டிஜிபி சைலேந்திர பாபவுக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  முன்னதாக, தமிழகத்தில் காவலர்களுக்கு வாரம் ஒருநாள் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

  இதுதொடர்பாக அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் எஸ்பிக்களுக்கு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு அனுப்பிய சுற்றறிக்கையில், காவலர்கள் உடல்நலன் மற்றும் குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிடுவதற்கு வாரம் ஒருநாள் விடுப்பு தரப்பட வேண்டும் எனவும் காவலர்களின் பிறந்தநாள், திருமண நாள்கள் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கு விடுப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியில் ஈடுபடும் வார விடுமுறை தேவைப்படாத காவலர்களுக்கு மிகை நேர ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

  Also read: கொரோனாவால் உயிரிழந்த காவலர்கள் உருவபடத்திற்கு மரியாதை; கண்ணீர் விட்டு அழுத காவலர்கள், குடும்பத்தினர்!

  இந்நிலையில், காவலர்களுக்கு வாரத்தில் ஒருநாள் கட்டாய ஓய்வளிக்க வேண்டுமென தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு ஆணை பிறப்பித்திருப்பதைப் பெரிதும் வரவேற்கிறேன் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்..

  இதுதொடர்பாக சீமான் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வளித்தல், அவர்களது மன அழுத்தத்தைப் போக்க ஆண்டுதோறும் இருமுறை குடும்பத்தோடு சுற்றுலா செல்ல அனுமதித்தல், அவர்களது பணிக்கேற்ற ஊதியத்தை உறுதிப்படுத்துதல், ஆண் காவலர்களுக்கு 8 மணி நேரப் பணி, பெண் காவலர்களுக்கு 6 மணி நேரப் பணி, சுழற்சிமுறையில் பணி என்று பணிநேரத்தை வரையறை செய்தல், பெண் காவலர்களுக்கு முன்னுரிமை அளித்தல் என, காவல்துறையைச் சீர்திருத்தி, மறுகட்டமைப்புச் செய்து மக்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையேயான உறவை மேம்படுத்த பல்வேறு செயல்திட்டங்களை முன்வைத்திருக்கிறது நாம் தமிழர் கட்சி.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அவற்றுள் ஒன்றான, காவலர்களுக்கு வாராந்திர ஓய்வுத் திட்டத்தை, தற்போது நடைமுறைப்படுத்தியிருப்பது மகிழ்வைத் தருகிறது. அதனை நிறைவேற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும், சைலேந்திர பாபு அவர்களுக்கும் எனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
  Published by:Esakki Raja
  First published: