பாரம்பரியத்தை காக்க மணக்கோலத்தில் மாட்டு வண்டியில் பயணித்த மணமக்கள்
முதன் முதலாக மாட்டு வண்டியில் சென்றது நல்ல அனுவமாக இருந்தது எனவும் மணமகள் சுகன்யா தெரிவித்தார்.

மாட்டு வண்டியில் பயணித்த மணமக்கள்
- News18 Tamil
- Last Updated: September 4, 2020, 7:50 PM IST
கோவை மாவட்டம் சூலூரில் திருமணம் முடிந்தவுடன் பட்டதாரி தம்பதி , கொங்கு மண்டல பாரம்பரிய படி ரேக்ளா மாட்டுவண்டியில் பயணித்தபடி மணமகன் வீட்டிற்கு சென்றனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த கபடி வீரர் பாலுமகேந்திரன். எம்.ஏ. பட்டதாரியான இவருக்கும் கோவை குறிச்சி பகுதியை சேர்ந்த எம்.எஸ்.சி பட்டதாரியான சுகன்யா என்பவருக்கும் கடந்த வாரம் சூலூரில் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த பின்னர் வழக்கமாக கார்களில் புது மண தம்பதியினர் வீட்டிற்கு செல்வது வழக்கமாகிவிட்ட நிலையில் , கொங்கு மண்டல பாரம்பரியபடி மாட்டு வண்டியில் செல்ல வேண்டும் என்பதற்காகவே திருமணம் முடிந்தவுடன் மனைவியுடன் மாட்டு வண்டியில் பயணம் செய்ததாக பட்டதாரி இளைஞர் பாலுமகேந்திரன் தெரிவித்தார். அடுத்து வரும் இளைஞர்களும் பாரம்பரியத்தை காப்பாற்ற இதை செய்ய வேண்டும் என்பதற்காகவும், தமிழர்களின் கலாச்சார நிகழ்வை கடைபிடிக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தவே திருமணம் முடிந்தவுடன் மாட்டுவண்டியில் சென்றதாக பட்டதாரி இளைஞர் பாலுமகேந்திரன் தெரிவித்தார்.

மாட்டு வண்டியில் இது வரை பயணித்ததே இல்லை எனவும், திருமணத்தின் போது கூட "செட்" போட்டு இருக்கின்றனர் என நினைத்ததாகவும், முதன் முதலாக மாட்டு வண்டியில் சென்றது நல்ல அனுவமாக இருந்தது எனவும் மணமகள் சுகன்யா தெரிவித்தார். திருமணம் முடிந்து கணவனுடன் மாட்டு வண்டியில் பயணித்தது புதிய அனுபவமாக இருந்த்து எனவும் ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் லேசான பயமும் இருந்தது என்றும் தெரிவித்தார்.ஜல்லிகட்டு போராட்டத்திற்கு பின்பு தமிழகத்தில் இளைய சமூகத்தினர் மத்தியில் பாரம்பரிய கலைகள் , பாரம்பரிய விளையாட்டுகள், பழக்க வழக்கங்கள் மீது தனித்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கள் பகுதிகளில் இருந்து வழக்கொழிந்து போன பாரம்பரிய பழக்கவழக்கங்களை மீட்டெடுக்க முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த கபடி வீரர் பாலுமகேந்திரன். எம்.ஏ. பட்டதாரியான இவருக்கும் கோவை குறிச்சி பகுதியை சேர்ந்த எம்.எஸ்.சி பட்டதாரியான சுகன்யா என்பவருக்கும் கடந்த வாரம் சூலூரில் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த பின்னர் வழக்கமாக கார்களில் புது மண தம்பதியினர் வீட்டிற்கு செல்வது வழக்கமாகிவிட்ட நிலையில் , கொங்கு மண்டல பாரம்பரியபடி மாட்டு வண்டியில் செல்ல வேண்டும் என்பதற்காகவே திருமணம் முடிந்தவுடன் மனைவியுடன் மாட்டு வண்டியில் பயணம் செய்ததாக பட்டதாரி இளைஞர் பாலுமகேந்திரன் தெரிவித்தார்.