சிஏஏ போராட்டக் களத்தில் திருமணம்: மணக்கோலத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷம்..!

மண்டபத்தில் நடைபெறவிருந்த திருமணம் திடீரென மாற்றம் செய்யப்பட்டது.

மண்டபத்தில் நடைபெறவிருந்த திருமணம் திடீரென மாற்றம் செய்யப்பட்டது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  கோவையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்திற்கு இடையே திருமணம் நடைபெற்றது.

  குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆத்துப்பாலத்தில் 2-ஆவது நாளாக 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த காய்கறி வியாபாரியான அப்துல்கலாமிற்கும், கரும்புக்கடை பகுதியை சேர்ந்த ரேஷ்மா ஷெரினுக்கும் இன்று மண்டபத்தில் திருமணம் நடைபெறவிருந்தது.

  அதனை மாற்றி போராட்டகளத்தில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து போராட்ட களத்தில் அமர்ந்த தம்பதி குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், என்பிஆர், என்ஆர்சி உள்ளிட்ட சட்டங்களை திரும்ப பெறக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

   
  Published by:Sivaranjani E
  First published: