கொரோனாவால் பறிபோன வாழ்வாதாரம்: நிவாரணம் கோரி கஞ்சித்தொட்டி திறந்த நெசவாளர்கள்..

சேலைகளை நெய்வதற்கான மூலப்பொருட்கள் கிடைக்காததாலும், நெய்யப்பட்ட சேலைகள் விற்பனை ஆகாமலும் தவிக்கும் நெசவாளர்கள் கஞ்சித்தொட்டி திறந்துள்ளனர்.

கொரோனாவால் பறிபோன வாழ்வாதாரம்: நிவாரணம் கோரி கஞ்சித்தொட்டி திறந்த நெசவாளர்கள்..
கஞ்சித்தொட்டி திறந்த திருவண்ணாமலை நெசவாளர்கள்
  • Share this:
சேலைகளை நெய்வதற்கான மூலப்பொருட்கள் கிடைக்காததாலும், நெய்யப்பட்ட சேலைகள் விற்பனை ஆகாமலும் தவிக்கும் நெசவாளர்கள் கஞ்சித்தொட்டி திறந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த மாம்பட்டு கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

திருவண்ணாமலையில் கஞ்சிதொட்டி திறந்த நெசவாளர்கள்



இதில் 500க்கும் மேற்பட்ட மக்கள் நெசவாளர் குடும்பங்கள் ஆகும் கடந்த 3 மாதகாலமாக கொரோனா தொற்றால் தமிழ்நாடு முடங்கியதால் கடந்த மூன்று மாத காலமாக வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள்.


திருவண்ணாமலையில் கஞ்சிதொட்டி திறந்த நெசவாளர்கள்

எந்தவிதமான நிவாரண உதவிகளும் வழங்காததால் நெசவு தொழில் செய்ய போதுமான மூலப்பொருட்கள் கிடைக்காததாலும் நெய்யப்பட்ட சேலைகளை எந்த வணிக நிறுவனங்களும் வாங்க முன்வராததால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நெசவாளர் குடும்பங்களுக்கு மாதம்தோறும் 5000 ரூபாய் நிவாரண உதவி கோரி நெசவாளர் குடும்பங்கள் தங்கள் கிராமத்தில் கஞ்சித் தொட்டி திறந்து பெண்கள் ஆண்கள் என நீண்ட வரிசையில் காத்திருந்து கஞ்சி வாங்கி குடித்தனர்
First published: June 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading