Tamil News Live: சென்னையில் கனமழை காரணமாக வீடு இடிந்து ஒருவர் பலி

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

 • News18 Tamil
 • | November 04, 2022, 19:57 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED 24 DAYS AGO

  AUTO-REFRESH

  HIGHLIGHTS

  19:56 (IST)

  சென்னையில்  கனமழை காரணமாக வீடு இடிந்து ஒருவர் பலி

  யானைக்கவுனி என்எஸ்சி போஸ் சாலையில் வீடு இடிந்து விழுந்து  ஒருவர் பலி.  சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் சவுகார்பேட்டை சேர்ந்த கங்குதேவி (60) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

  18:26 (IST)

  அமைச்சர் கார்மீது காலணி வீசப்பட்ட வழக்கு: நீதிமன்றம் புதிய உத்தரவு

  மதுரை விமான நிலைய வளாகத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய வழக்கில், முன் ஜாமீன் பெற்ற மதுரை விளாங்குடி வேங்கைமாறன், மேல அனுப்பானடி மணிகண்டன், மானகிரி கோகுல் அஜித் ஆகிய 3 பேரும்  மதுரை  வாடிப்பட்டி நீதிமன்றத்தில் நாள்தோறும் ஆஜராகி  கையெழுத்திட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

  17:31 (IST)

  தமிழகத்தின் வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம் -  தமிழக அரசு

  தமிழக தொழில் வளர்ச்சிக்கு கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் 2-வது விமான நிலைய உருவாக்கம் காலத்தின் கட்டாயம் என தமிழக அரசு விளக்கம்

  15:28 (IST)

  நவம்பர் 12-ம் தேதி தமிழகம் வருகிறார் அமித் ஷா

  வருகிற 11-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வரும்நிலையில், அதற்கு அடுத்த நாள் 12-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தமிழக வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமரும், உள்துறை அமித் ஷாவும் தமிழகம் வருவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

  15:7 (IST)

  கோவையில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தடை

  நவம்பர் 6 ஆம் தேதி கோவை, திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர மற்ற 44  இடங்களிலும் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அனுமதி வழங்க கோரிய நிலையில், கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், நாகர்கோவில், அருமனை  மற்றும் பல்லடம் ஆகிய இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  13:24 (IST)

  இந்த கல்வியாண்டிலிருந்து தமிழ்மொழிப்பாடம் கட்டாயம்!

  தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் இந்த கல்வியாண்டிலிருந்து முதல் மற்றும் 2 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு தமிழ் மொழி கட்டாயப் பாடமாக நடைமுறைப்படுத்தப்படும் என உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார்.  

  10:57 (IST)

  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பத்தில்  குழப்பம்!

  சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியிட்ட பின்னரும் இயங்குகிறது. வருவாய் மாவட்டம் சென்னையிலும் கல்வி மாவட்டம் திருவள்ளூரிலும் இருப்பதால் விடுமுறை விடுவதிலும் பள்ளி நிர்வாகங்கள் இடையே குழப்பம் நீடித்து வருகிறது. இதன் காரணமாக சென்னை ஆட்சியர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தும் திருவொற்றியூரில் உள்ள திருத்தங்கல் நாடார் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகள் இயங்கி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்திலும் இதேபோல குழப்பம் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  10:37 (IST)

  அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த 20 மாவட்டங்களில் மழை!

  சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி விருதுநகர், சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
  
  9:40 (IST)

  தமிழறிஞர் நெடுஞ்செழியன் காலமானார் : முதல்வர் இரங்கல்

  சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த தமிழறிஞர் க.நெடுஞ்செழியன் சிகிச்சை பலனின்றி உயிரிழிந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலி இரங்கல் தெரிவித்துள்ளார்.

  8:15 (IST)

  பிரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி


  செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் உள்ள கோதண்டராமன் நகர் அருகே பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பலியாக சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.