Tamil News Live: டி20 உலகக் கோப்பை: அரையிறுதியில் இங்கிலாந்து.. ஆஸி. வெளியேறியது

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

  • News18 Tamil
  • | November 05, 2022, 17:01 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED A MONTH AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    16:56 (IST)

    டி20 உலகக் கோப்பை: அரையிறுதியில் இங்கிலாந்து.. ஆஸி. வெளியேறியது

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்றும் வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதிக்கு இங்கிலாந்து அணி முன்னேறியுள்ளது. இதனால், போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. 

    13:25 (IST)

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக அமைச்சர் பொன்முடி மகன் தேர்வு..!

    அமைச்சர் பொன்முடி மகன் அசோக் சிகாமணி போட்டியின்றி ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்டுள்ளார். செயலாளராக பழனியும், பொருளாளராக சீனிவாசராவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எதிர்த்து போட்டியிட்ட பிரபு தலைமையிலான குழுவினர் அனைவரும்  வாபஸ் பெற்றதால் அனைத்து உறுப்பினர்களும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    .

    10:59 (IST)

    வாரத்தின் கடைசிநாளான இன்று உயர்ந்த தங்கம் விலை : இன்றைய நிலவரம்?

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.53 உயர்ந்து ரூ.4,770 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி சவரனுக்கு ரூ.424 உயர்ந்து ரூ.38,160 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

    அதேபோல சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.90 அதிகரித்து ரூ.66.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    10:42 (IST)

    கல்லூரி மாணவி கொலை வழக்கில் கைதான சதீஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

    பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யப்பிரியா கொல்லப்பட்ட வழக்கில் கைதான சதீஷ் மீது குண்டர் சட்டத்தில் பாய்ந்தது.  சிபிசிஐடியின் பரிந்துரையில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

    10:38 (IST)

    ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் : வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில், நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கும் ’லால் சலாம்’ என்ற  புதிய படத்தின் பெயரை படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    9:39 (IST)

    9-ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழகத்தில் அடுத்த 5 தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு 

    தென்மேற்கு வங்க கடல் பகுதியில் இலங்கையை ஒட்டி வரும் 9ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் எனவும் தொடர்ந்து இது வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு புதுச்சேரி நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    மேலும் தற்போது தெற்கு அந்தமான் மற்றும் தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென்னிந்திய பகுதிகளான தமிழ்நாடு புதுச்சேரி கேரளா கர்நாடகா பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    9:5 (IST)

    ஆர்எஸ்எஸ் பேரணி தமிழகம் முழுவதும் ஒத்திவைப்பு


    நாளை தமிழகம் முழுவதும் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த உயர்நீதிமன்றம் நிபந்தனை உடன் அனுமதி வழங்கியிருந்த நிலையில்,  உயர்நீதிமன்ற நிபந்தனை உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆர்எஸ்எஸ் அமைப்பு முடிவு செய்துள்ளனர்.

    இதனையடுத்து நாளை நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    8:35 (IST)

    குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை 


    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து நேற்று மாலை முதல் பெய்து வரும் மழையின் காரணமாக பிரதான அருவியான குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    7:53 (IST)

    செம்பரம்பாக்கம் ஏரியில் 500 கன அடி நீர் வெளியேற்றம் : மாவட்ட ஆட்சியர் அலெர்ட

    இன்று (5-11-22) காலை10 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 500 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் காரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.

    7:14 (IST)

    அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் அடுத்த ஒரு முதல் மூன்று மணி நேரத்தில் ஆரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.