முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்துக்கு இன்றும் நாளையும் அரஞ்ச் அலர்ட்..

தமிழகத்துக்கு இன்றும் நாளையும் அரஞ்ச் அலர்ட்..

மழை

மழை

சென்னை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :

தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பரவலாக கன மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வளிமண்டல் மேலடுக்கு சுழற்சி தற்போது குமரி கடற்கரை பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது.இதன் காரணமாக தமிழகம், கேரளா, புதுவை, கடலோர ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் 5 நாட்களுக்கு மழையின் தீவிரம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுவை உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பரலாக கன மழையும், ஒரு சில இடங்களில் மிக கன மழை இருக்கும்.நேற்று தமிழகத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிகப்பு எச்சரிக்கை கொடுத்த நிலையில், இன்றும், நாளையும் தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் சென்னை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos

    மீனவர்கள் எச்சரிக்கை பொறுத்தவரையில் குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தமிழக கடற்கரை பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.எனவே  இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

    First published:

    Tags: Chennai rains, Heavy Rains