Home /News /tamil-nadu /

சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை..!

சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை..!

சென்னையில் மழை

சென்னையில் மழை

Chennai Rains: சென்னையில் நேற்று இரவு நகரின் பெரும்பாலான பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், நேற்றிரவும் கனமழை பெய்தது.

    சென்னை நுங்கம்பாக்கம், தி.நகர், அண்ணா சாலை, மைலாப்பூர் உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இந்நிலையில், தமிழகம், புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    குறிப்பாக, டெல்டா மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ஈரோடு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணிநேரத்துக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Chennai Rain, Chennai rains, Tamil News, Weather News in Tamil

    அடுத்த செய்தி