Home /News /tamil-nadu /

கரையை நெருங்கும் காற்றழுத்தம்.. சென்னை உட்பட 22 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

கரையை நெருங்கும் காற்றழுத்தம்.. சென்னை உட்பட 22 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு ஆந்திரா -  வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    தமிழகத்தில் சென்னை உட்பட 22 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில வாரங்களாக பரவலாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. வெள்ளநீர் வடிந்து  சென்னை தற்போது மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் சென்னை உட்பட  22  மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

    தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து வரும் 18ஆம் தேதி தெற்கு ஆந்திரா -  வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும்.  இதன் காரணமாக இன்று ( 17.11.2021) திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

    கள்ளக்குறிச்சி , மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, சேலம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் நாளை (18.11.2021) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், செங்கல்பட்டு, திருவண்ணாமலை கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன கன மழையும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும்.அடுத்த இரண்டு நாள்களுக்கு மத்திய மேற்கு, தென்மேற்கு வங்க கடல், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி  காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Chennai, Chennai rains, Flood, Flood warning, Kanyakumari, Red Alert, Weather News in Tamil

    அடுத்த செய்தி