Home /News /tamil-nadu /

தமிழகத்தில் நாளை முதல் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் நாளை முதல் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

மழைக்கு வாய்ப்பு

மழைக்கு வாய்ப்பு

சென்னையில் நேற்றிரவு சில இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது.

    தமிழகம், புதுவை, காரைக்காலின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் நேற்றிரவு 11 மணி முதல் 12 மணி வரையில் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அண்ணாநகர், திருமங்கலம், அமைந்தகரை, சூளைமேடு, கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதேபோன்று வடபழனி, சாலிகிராமம், அசோக்நகர், வளசரவாக்கம், போரூர், மதுரவாயல், தியாகராய நகர் போன்ற பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.

     

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் துவங்கி உள்ளது. இருப்பினும் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. கோடைக்காலத்தை போல் வெயில் வெளுத்து வாங்குகிறது. இருப்பினும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான தேனி, தென்காசியில் சில இடங்களில் மழை பெய்கிறது.

    இந்நிலையில் ஜூன் 28 ல் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரகை்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், ஜூன் 29, 30 தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும்  புதுவை, காரைக்காலின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    Also Read: தமிழகத்தில்  ஒரே நாளில் 1,461 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

    மேலும் சென்னையை பொறுத்தமட்டில் அடுத்த 24 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் நேற்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இந்நிலையில் தான் சென்னையில் நேற்று இரவு சில இடங்களில் மழை பெய்துள்ளது.

    அதன்படி அண்ணாநகர், திருமங்கலம், அமைந்தகரை, சூளைமேடு, கேகே நகர், வடபழனி, சாலிகிராமம், அசோக்நகர், வரசரவாக்கம், போரூர், மதுரவாயல், முகப்பேர், உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. பகலில் வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் இரவில் மழை பெய்ததால் மண் குளிர்ச்சியடைந்துள்ளது. பரவலாக பெய்த இந்த மழையால் மக்கள் பரவசமடைந்தனர்
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Chennai rains, Rain, Weather News in Tamil

    அடுத்த செய்தி