Home /News /tamil-nadu /

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை மையம் தகவல்

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை மையம் தகவல்

மழை

மழை

RainUpdate | சென்னையை பொறுத்தவரை:அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின்  சில இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மேலும் படிக்கவும் ...
    தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல  மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 08.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    09.06.2022 முதல் 12.06.2022 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை:அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின்  சில இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

    Also Read : சென்னையில் முன்னறிவிப்பின்றி மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் தோண்டிய பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து


    கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  தேவாலா (நீலகிரி) 3, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), அன்னவாசல் (புதுக்கோட்டை), இலுப்பூர் (புதுக்கோட்டை), சுருளக்கோடு (கன்னியாகுமரி), சின்கோனா (கோயம்புத்தூர்) தலா 1.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை :  

    08.06.2022 முதல் 12.06.2022 வரை மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதி, கேரளா - கர்நாடக கடலோரப்பகுதி  மற்றும்  இலட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர்  வேகத்தில் வீசக்கூடும்.மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Meteorological Center, Rain updates

    அடுத்த செய்தி