Home /News /tamil-nadu /

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தமிழகத்தின் நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பி, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,  இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால்   பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும்  கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    14.09.2022 முதல் 16.09.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும்.

    கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
    பந்தலூர் (நீலகிரி) 16, வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி) 11, வால்பாறை PTO (கோயம்புத்தூர்), தேவாலா (நீலகிரி), ஹரிசன் எஸ்டேட், செருமுள்ளி (நீலகிரி) தலா 5.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:  12.09.2022: மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55  கிலோ மீட்டர்   வேகத்தில் வீசக்கூடும்.
    வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய  மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    13.09.2022: மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய  மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    14.09.2022 மற்றும் 15.09.2022: மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோரப்பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50  கிலோ மீட்டர்   வேகத்தில் வீசக்கூடும்.
    மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Rain, Weather News in Tamil

    அடுத்த செய்தி