Home /News /tamil-nadu /

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

குமரிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக 4 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.

    குமரிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக 4 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


    விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.


    ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.


    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மரக்காணத்தில் 20 சென்டி மீட்டர், கடலூர் 13 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


     
    Published by:Vijay R
    First published:

    Tags: Weather, Weather Forecast, Weather Update

    அடுத்த செய்தி