ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Weather Update : உருவானது அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி... தமிழ்நாட்டில் மழையை பெய்யுமா?

Weather Update : உருவானது அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி... தமிழ்நாட்டில் மழையை பெய்யுமா?

ஜாவித் புயல் காரணமாக அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் டிசம்பர் 3 ம் தேதியில் இருந்து மழை அதிகரிக்கும்.

 • 2 minute read
 • Last Updated :

  தெற்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும்.

  புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு அடுத்த மத்திய கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆக உருவாகும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  வடக்கு ஆந்திரா கடற்கரை தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் போது புயலாக வலுப்பெற்று கரையை கடக்கும். இந்த புயலுக்கு ஜாவித் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

  ஜாவித் புயல் காரணமாக அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் டிசம்பர் 3 ம் தேதியில் இருந்து மழை அதிகரிக்கும்.

  தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியினால் தமிழகத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Also Read : தமிழக மக்களுக்கு குட் நியூஸ்... ஓய்ந்தது கனமழை... பள்ளி விடுமுறைகளுக்கு இனி வாய்ப்பில்லை

   சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

  Also Read : புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி... இந்த மாவட்டங்களில் கனமழை

  கடந்த 24 மணி நேரத்தில் 15 இடங்களில் கன மழை பெய்துள்ளது. அதிகப்படியான பதிவான மழை அளவு

  வீரபாண்டி (தேனி) 12, திருப்புவனம் (சிவகங்கை), பாபநாசம் (திருநெல்வேலி), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), காயல்பட்டினம் (தூத்துக்குடி) தலா 9, மணிமுத்தாறு (திருநெல்வேலி), பரமக்குடி (ராமநாதபுரம்), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), மண்டபம் (ராமநாதபுரம்), ஆய்க்குடி (தென்காசி) தலா 8, கோவிலங்குளம் (விருதுநகர்), மதுரை விமான நிலையம் (மதுரை), சிவகாசி (விருதுநகர்), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), தனியமங்கலம் (மதுரை) தலா 7,வாலிநோக்கம் (ராமநாதபுரம்), உத்தமபாளையம் (தேனி), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), சோழவரம் (திருவள்ளூர்), உசிலம்பட்டி (மதுரை), மதுராந்தகம் (செங்கல்பட்டு), கயத்தாறு (தூத்துக்குடி), வத்திராயிருப்பு (விருதுநகர்),), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), திருவாடானை (இராமநாதபுரம்), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை), கூடலூர் (தேனி), தென்காசி (தென்காசி) தலா 6.

  First published: