ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மிரட்டும் புதிய புயல்.. தமிழகத்தின் 8 மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட் அறிவிப்பு

மிரட்டும் புதிய புயல்.. தமிழகத்தின் 8 மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட் அறிவிப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

தமிழ் நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்யும் பட்சத்தில் அணைகளின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் மாநில பேரிடர் மீட்பு மைய செயல்பாடுகளை தீவிர படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட உள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது எனவும் புதன்கிழமை மாலை புயல் சின்னமாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் டிசம்பர் 9 ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகபட்டிணம் ஆகிய 8 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என  இந்திய வானிலை மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.

இதனிடையே சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10-ஆம் தேதி : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

இதையும் படிக்க :  அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட  விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு

11ஆம் தேதி : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலின் சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அன்றைய தினம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராமநாதபுரம், கரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது

12ஆம் தேதி : திங்கள் கிழமையன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது

இதேப்போல் திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னை வானிலை:

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கனமழை புயல் சின்னம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப் படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளருடன் தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த சந்திப்பின்போது புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது,

தமிழ் நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்யும் பட்சத்தில் அணைகளின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் மாநில பேரிடர் மீட்பு மைய செயல்பாடுகளை தீவிர படுத்துதல் மற்றும் வருவாய் துறையினருடன் பிற துறைகள் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொள்ளுதல் மழை வெள்ள பாதிப்பு தடுப்பு குழுக்களை தயார் நிலையில் வைத்திருத்தல் குறித்த தொடர் நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட உள்ளன.

First published:

Tags: MET warning, Rain Forecast, Rain Update, Weather News in Tamil