ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அடுத்த மழைக்கு ரெடியா? உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. லேட்டஸ்ட் வெதர் அப்டேட்!

அடுத்த மழைக்கு ரெடியா? உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. லேட்டஸ்ட் வெதர் அப்டேட்!

மாதிரி படம்

மாதிரி படம்

தமிழ்நாட்டில் 14ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகவுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் 14ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

  இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், '' இலங்கை கடல் பகுதியை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 9ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதியை நோக்கி வலுவடைந்து நகரக்கூடும். காற்றழுத்த தாழ்வு பகுதி கடலில் வலுவாக தேவையான ஈரப்பதம், காற்றின் அழுத்தம் சாதகமான சூழலில் நிலவுவதால், இது நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக(well marked deep depression) மாறக்கூடும். புயலாக வலுப்பெறுவது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

  இலவச தரிசனம் கிடையாது.. 11 மணி நேரம் மூடப்படும் திருப்பதி.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேவஸ்தானம்!

  இதன் காரணமாக 11ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அதே போல 12ஆம் தேதி தொடங்கி 14ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பரவலாக மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Heavy rain, Weather News in Tamil