Home /News /tamil-nadu /

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு கனமழை - வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு கனமழை - வானிலை மையம் தகவல்

கனமழை

கனமழை

TN Rains : சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Chennai | Tenkasi | Erode | Karur | Madurai
    தமிழக  பகுதிகளின்  மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு  சுழற்சி காரணமாக, தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    04.09.2022  : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும்  திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    05.09.2022  : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தென்காசி, மதுரை, கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர்,  ராணிப்பேட்டை,  திருவண்ணாமலை மற்றும்   கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

    06.09.2022  : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு,  கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும்   கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

    07.09.2022 மற்றும் 08.09.2022  : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35  டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

    கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்) :

    ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி) தலா 7, நெடுங்கல் (கிருஷ்ணகிரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), பையூர் AWS (கிருஷ்ணகிரி) தலா 6, புத்தன் அணை (கன்னியாகுமரி), பூதபாண்டி (கன்னியாகுமரி), பாலக்கோடு (தர்மபுரி), பாப்பாரப்பட்டி KVK (தர்மபுரி), பந்தலூர் (நீலகிரி) தலா 5, சுருளக்கோடு (கன்னியாகுமரி) 4, எட்டயபுரம் (தூத்துக்குடி மாட்டம்), திருமங்கலம் (மதுரை), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி, மணப்பாறை (திருச்சி), சிற்றாறு (கன்னியாகுமரி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), சிவலோகம் (கன்னியாகுமரி) தலா 3, தேவாலா (நீலகிரி), சின்னக்கல்லார் (கோவை), கோவில்பட்டி (தூத்துக்குடி), வால்பாறை PTO  (கோவை), சின்கோனா (கோவை) தலா 2, தக்கலை (கன்னியாகுமரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), செங்கம் (திருவண்ணாமலை), பாரூர் (கிருஷ்ணகிரி), திண்டுக்கல் (திண்டுக்கல்), பஞ்சப்பட்டி (கரூர்), வீரகனூர் (சேலம்), நிலக்கோட்டை (திண்டுக்கல்), இரணியல் (கன்னியாகுமரி), சாத்தூர் (விருதுநகர்), குழித்துறை (கன்னியாகுமரி), மாதவரம் AWS (திருவள்ளூர்), ஆத்தூர் (சேலம்), மைலம்பட்டி (கரூர் மாவட்டம்) தலா 1.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை: 

    04.09.2022 மற்றும் 05.09.2022:  லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகள்  மற்றும்   அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில்  சூறாவளிக்காற்று மணிக்கு மணிக்கு   40 முதல் 50 கிலோ மீட்டர்   வேகத்தில் வீசக்கூடும்.

    06.09.2022: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும்   அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகள், மற்றும்  இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்     பலத்தக்காற்று மணிக்கு மணிக்கு   40 முதல் 50 கிலோ மீட்டர்   வேகத்தில் வீசக்கூடும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    07.09.2022: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும்   அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகள், மற்றும்  இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்     பலத்தக்காற்று மணிக்கு மணிக்கு   40 முதல் 50 கிலோ மீட்டர்   வேகத்தில் வீசக்கூடும்.  வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில்  சூறாவளிக்காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    08.09.2022: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும்   அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகள், மற்றும்  இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்     பலத்தக்காற்று மணிக்கு மணிக்கு   40 முதல் 50 கிலோ மீட்டர்   வேகத்தில் வீசக்கூடும். வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில்  சூறாவளிக்காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Chennai Rain, Job Vacancy, Weather News in Tamil

    அடுத்த செய்தி