தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

தென்மேற்கு பருவக் காற்றின் மலைச்சரிவு மழைப்பொழிவு காரணமாக கோவை, நீலகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
கோப்புப் படம்
  • Share this:
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு ஆந்திரா மற்றும் தெற்கு கர்நாடகப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவ காற்றின் மலைச்சரிவு மழைப்பொழிவு (Orographic rainfall) காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும்.

Also read: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பீலா ராஜேஷ் மீது புகார்


நாளை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான  மழையும், வங்கக்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.



கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் தேவாவின் 15 சென்டி மீட்டர் மழையும், அவலாஞ்சியில் 10 சென்டி மீட்டர் மழையும், கூடலூரில் 9 சென்டிமீட்டர் மழையும், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு மற்றும் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 8 சென்டி மீட்டர் மழையும், கோவை மாவட்டம் சின்னக்கல்லார், நீலகிரி மாவட்டம் மேல் பவானியில் ஏழு சென்டிமீட்டர் மழையும், கோவை மாவட்டம் சோலையாரில் 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.மீனவர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கு மற்றும் மத்திய மேற்கு வங்க, வடக்கு அந்தமான் பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகள், ஒடிசா & மேற்கு வங்காளம் கடலோரப் பகுதிகள், கடலோர கேரளா, கர்நாடகா லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு தென்மேற்கு மத்திய கிழக்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகள், குஜராத் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் அடுத்த நான்கு நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்
First published: August 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading