Home /News /tamil-nadu /

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை இருக்காது...!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை இருக்காது...!

  • News18
  • Last Updated :
    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பொறுத்தவரை இன்று கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலான மழையும், பல இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.

    சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு நாட்களாக கனமழை பெய்த நிலையில், சாலைகளில் தண்ணீர் தேங்கின. மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது.

    இன்று, சென்னையில் வானம் என்று தெளிவாக காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு மட்டும் வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

    மேலும் தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவிவரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இன்றும் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
    Published by:Sankar
    First published:

    Tags: Chennai, Weather Update

    அடுத்த செய்தி