தமிழக பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. 23 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழக பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலையில் பரவலாக மழை பெய்தது. திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருந்தது மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து 2 மணி நேரம் கனமழை பெய்தது. காந்திநகர், அங்கேரி பாளையம், பல்லடம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒருசில இடங்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை, பாடலூர், அகரம் சீகூர், குன்னம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. பருத்தி விதைக்கப்பட்ட நிலத்தில் மழைநீர் தேங்கியதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். நெல்லை மாநகர் பகுதிகளான பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை, சமாதானபுரம், பெருமாள்புரம் மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் சுமார் 30 நிமிடம் கன மழை பெய்தது.
கர்நாடகாவில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,25,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Also Read: இனி ராஜா போல பயணிக்கலாம் - அரண்மனை செட்டப்பில் ரயில்களை அறிமுகப்படுத்திய ரயில்வே துறை
சீர்காழி அருகே நாதல்படுகையில், ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வெள்ளை மணல், முதலைமேடு திட்டு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்டம் கீழணைக்கு நீர்வரத்து 1,30,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 32,740 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என கரையோர மக்களுக்கு ஆட்சியர் ரமண சரஸ்வதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், இன்று 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
திருச்சி, கரூர், சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.சென்னையில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.