ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மழைக்கு விடுமுறை... தமிழகத்தில் நாளை முதல் மழை குறையும் - வானிலை மையத்தின் கூல் அலெர்ட்!

மழைக்கு விடுமுறை... தமிழகத்தில் நாளை முதல் மழை குறையும் - வானிலை மையத்தின் கூல் அலெர்ட்!

மழை

மழை

நாளை முதல் படிப்படியாக தமிழகத்தில் மழையின் தீவிரம் குறைந்து வரும் 15 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தமிழகத்தில் நாளை முதல் படிப்படியாக மழையின் தீவிரம் குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வரும் நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி,

    வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி , குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்த நிலையில் தற்போது வட உள் தமிழகம் மற்றும் அதன் ஒட்டிய பகுதிகள் மற்றும் கேரள கடற்கரை ஒட்டிய அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சியாக நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை முதல் படிப்படியாக தமிழகத்தில் மழையின் தீவிரம் குறைந்து வரும் 15 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. மேலும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வருகின்ற 16ஆம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் குறிப்பிட்டுள்ளது

    Published by:Murugadoss C
    First published:

    Tags: Weather News in Tamil