Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையத்தின் அலெர்ட் இதோ!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையத்தின் அலெர்ட் இதோ!

மாதிரி படம்

மாதிரி படம்

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

27.11.2022 : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

28.11.2022 முதல் 30.11.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதையும் படிக்க : அடுத்த 2 வாரங்கள் இப்படித்தான் இருக்கப்போகிறது... வானிலை மையம் தகவல்!

சென்னை மற்றும் புறநகர் பகுதி:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Chennai rains, Weather News in Tamil