Home /News /tamil-nadu /

'சென்னை உள்பட 11 மாவட்டங்களுக்கான வானிலை எச்சரிக்கை... வெளியே செல்வோர் கவனம் தேவை

'சென்னை உள்பட 11 மாவட்டங்களுக்கான வானிலை எச்சரிக்கை... வெளியே செல்வோர் கவனம் தேவை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது / மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது / மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது / மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளது.

    'சென்னை உள்பட 11 மாவட்டங்களில் பலத்த வேகத்துடன் தரைக்காற்று வீசும்' என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது -

    நேற்று காலை தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று நள்ளிரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து இன்று காலை மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்க கூடும். இதன் காரணமாக,

    06.03.2022: கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இதையும் படிங்க - Chennai Power Cut: சென்னையில் வரும் திங்கள் அன்று (07-03-2022) முக்கிய பகுதிகளில் மின்தடை!

    சென்னையை பொறுத்தவரை: அடுத்த 12 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது / மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். பலத்த தரைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    இதையும் படிங்க - புதிய கல்விக் கொள்கையிலும் திமுக இரட்டை வேடம் போடுகிறதா? டிடிவி தினகரன் கேள்வி

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது / மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

    தரைக்காற்று எச்சரிக்கை: 06.03.2022: திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
    இவ்வாறு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
    Published by:Musthak
    First published:

    Tags: Weather News in Tamil

    அடுத்த செய்தி