கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தென் தமிழகம்,
தஞ்சாவூர்,
திருவாரூர்,
நாகப்பட்டினம்,
மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இலேசான முதல் மிதமான
மழை பெய்யக்கூடும் என
சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும், தென் வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, மார்ச் 1ஆம் தேதி, தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 2ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். தென்காசி, மதுரை, விருதுநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
27 மற்றும் 28 ஆகிய தேதிகளில், தென் கிழக்கு வங்க கடலோர பகுதிகளில் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடை இடையே மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Read More : பெற்றோர் கவனத்திற்கு... நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்... குழந்தைகளுக்கு மறக்காம போடுங்க..
மார்ச் 1ஆம் தேதி, தென்மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்க கடலோர பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடை இடையே மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.
Must Read : மவுண்ட்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் - சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிகள்...
மார்ச் 2ஆம் தேதி தென்மேற்கு வங்க கடலோர பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடை இடையே மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறார்கள் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.