Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் நாளை முதல் 6ஆம் தேதிவரை மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் அலெர்ட்

தமிழகத்தில் நாளை முதல் 6ஆம் தேதிவரை மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் அலெர்ட்

மழை

மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜனவரி 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை  வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையத்தின் தென் மண்டல தலைவருக்காக  மண்டல இயக்குனர்   பா. செந்தாமரை கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில்,  “ஜனவரி 2ஆம் தேதி      தமிழ்நாடு,   புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 3ஆம் தேதி    தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்   ஓரிரு   இடங்களில்   லேசானது    முதல்   மிதமான மழை   பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும்  4ஆம் தேதி  முதல் 6ஆம் தேதி  வரையில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு   இடங்களில்   லேசானது    முதல்   மிதமான மழை   பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 22-23  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 22-23  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை  ஏதுமில்லை எனவும் சென்னை  வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Weather News in Tamil