ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழகத்தில் 17-ம் தேதிவரை மழைக்கு வாய்ப்பு

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : தமிழகத்தில் 17-ம் தேதிவரை மழைக்கு வாய்ப்பு

மழை

மழை

RainUpatade : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை  பெய்யக்கூடும். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தில் 17-ம் தேதிவரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.  இதன் காரணமாக, கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.  இதன் காரணமாக,

13.12.2022: தமிழ்நாடு,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில  இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

14.12.2022 முதல் 17.12.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை  பெய்யக்கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

13.12.2022: லட்சதீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள், தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இதையும் படிங்க: அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மாறும் வெதர்.. மழை உண்டா? வானிலை அலெர்ட்!

14.12.2022:  லட்சதீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

15.12.2022 & 16.12.2022: மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Rain Update, Weather News in Tamil