ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் அடுத்தடுத்து 2 நாட்கள் மிக கனமழை : எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

தமிழகத்தில் அடுத்தடுத்து 2 நாட்கள் மிக கனமழை : எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

கனமழை

கனமழை

weather Update : தமிழ்நாட்டில் இன்று மிதமான மழை பெய்யும் என்றும், நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தமிழ்நாட்டில் வரும் 21, 22ம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் 48 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று மிதமான மழை பெய்யும் என்றும், நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வரும் 21ம் தேதி வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    அதே நாளில் திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூரில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க : தமிழக விவசாயிகள் கவனத்திற்கு.. பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

    22-ம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலையில் கனமழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

    Published by:Lakshmanan G
    First published:

    Tags: Rain Forecast, Weather News in Tamil