ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்? - தமிழகத்திற்கு மீண்டும் கனமழை அலெர்ட்

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்? - தமிழகத்திற்கு மீண்டும் கனமழை அலெர்ட்

மழை

மழை

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் வரும் 20ம் தேதி செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் வரும் 20ம் தேதி செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழையும், 21ம் தேதி காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வரும் 19ம் தேதி வலுப்பெறக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

    அதற்கடுத்த 3 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் தமிழகம் – புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் நாளை வரை மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதையும் படிங்க:  7 மாவட்டங்களை குறி வைத்த கனமழை.. வானிலை மையத்தின் அலெர்ட்!

    வரும் 20ம் தேதி செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    21ம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    Published by:Lakshmanan G
    First published:

    Tags: Heavy rain, Weather News in Tamil