ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்..!

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்..!

மழை

மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தகவல்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் பரவலான இடங்களில் வருகிற 7ஆம் தேதிவரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் தலைவரும் வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனருமான  பா. செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (3-ம் தேதி)தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல 4 மற்றும் 5-ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 6 மற்றும் 7-ம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள, டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Weather News in Tamil