ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் கனமழை : எந்தெந்த ஊர்களில் தெரியுமா?

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் வெளுத்துவாங்கப்போகும் கனமழை : எந்தெந்த ஊர்களில் தெரியுமா?

கனமழை

கனமழை

சென்னையை பொறுத்தவரை இன்று மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்  மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று (25ஆம் தேதி) காலையில் இலங்கை கடற்கரை அருகில் நிலவக் கூடும். அதன் பிறகு மேலும் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து 26ஆம் தேதி காலையில் இலங்கை வழியாக குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக, இன்று தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதேபோல் நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர் மற்றும் (Next) சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் அடுத்தடுத்த 2 நாட்கள் வெளுத்துவாங்கும் கனமழை : எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

சென்னையில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று சூறைக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், இடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Heavy rain, Weather News in Tamil