ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் 20-ம் தேதி முதல் மீண்டும் கனமழை : எந்தெந்த மாவட்டங்களுக்கு அலெர்ட்

தமிழகத்தில் 20-ம் தேதி முதல் மீண்டும் கனமழை : எந்தெந்த மாவட்டங்களுக்கு அலெர்ட்

மழை

மழை

Rain Upadate : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் டிசம்பர் 21 மற்றும் 22 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வரும் 20ம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்று முதல் 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

20ம் தேதி தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

21ம் தேதி புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி மற்றும் பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும்  சென்னையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில், இன்று 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் எனவும், அந்தமான் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Heavy rain, Weather News in Tamil