ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இந்த மாவட்டங்களில் பனிமூட்டம், உறைபனி அலெர்ட் : வானிலை மையம் கொடுத்த அப்டேட்

இந்த மாவட்டங்களில் பனிமூட்டம், உறைபனி அலெர்ட் : வானிலை மையம் கொடுத்த அப்டேட்

பனிமூட்டம்

பனிமூட்டம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

"நீலகிரி மற்றும் கோவை மலைப்பகுதிகளில் மேலும் 2 நாட்களுக்கு உறைபனி தொடரும்" என எச்சரித்துள்ள வானிலை மையம்,  ”தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 19-ம் தேதிவரை வறண்ட வானிலையே நிலவும்” என்றும்  தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக  சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பா. செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “15-ம் தேதி மற்றும் 16-ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ்  குறைவாக இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.

அதே நேரம் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேபோல 17-ம் தேதி மற்றும் 19-ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில், “அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 20  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்” என்று  தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 20-21  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Weather News in Tamil