ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் அடுத்த 2 வாரங்கள் இப்படித்தான் இருக்கப்போகிறது... வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 2 வாரங்கள் இப்படித்தான் இருக்கப்போகிறது... வானிலை மையம் தகவல்!

வானிலை ஆய்வு மையம்

வானிலை ஆய்வு மையம்

அடுத்த 2 வாரங்களுக்கு சராசரியைவிட குறைவாகவே வடகிழக்குப் பருவமழை பெய்யும் என வானிலை மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தகவல்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் அடுத்த 2 வாரங்களுக்கு வடகிழக்கு பருவமழை இயல்பைவிட குறைவாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரியில் கடந்த ஒரு வாரத்தில் மழையளவு வெகுவாக குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறினார்.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேசுகையில், நவம்பர் 17 முதல் 23-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் இயல்பைவிட 91 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளதாகவும், கடந்த ஒரு வாரத்தில் 16 மாவட்டங்களில் மழை பதிவாகவில்லை எனவும் குறிப்பிட்டார்.

மேலும் அக்டோபர் முதல் நவம்பர் வரையிலான 2 மாதங்களில், இயல்பைவிட 4 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளதாகவும், அடுத்த இரண்டு வாரங்களுக்கு வடகிழக்கு பருவமழை இயல்பைவிட குறைவாக இருக்கும் எனவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

First published:

Tags: Rain Update, Weather News in Tamil