ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

55 கிமீ வேகத்தில் காற்று.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று எங்கெல்லாம் மழை?

55 கிமீ வேகத்தில் காற்று.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று எங்கெல்லாம் மழை?

மழை

மழை

சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

  கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வருகின்ற 20-ம் தேதி வரை 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

  அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு வானிலை.. பாடல் வரி மூலம் பக்கா அலெர்ட் - வெதர்மேன் கொடுத்த கூல் அப்டேட்! (news18.com)

  இதில், வருகின்ற 20-ம் தேதி திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும்,

  அது, 48 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுப்பெறக்கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.

  இதனால், மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


  Published by:Murugadoss C
  First published:

  Tags: Weather News in Tamil