ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

விலகும் பனி.. வருகிறது மழை.. உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை அலெர்ட்..!

விலகும் பனி.. வருகிறது மழை.. உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை அலெர்ட்..!

மழை

மழை

வரும் 29ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் அநேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் மிதமான பனி நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிகாலை நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர். எனினும் கடந்த சில நாட்களாக மழை தொடர்பான அறிவிப்புகளையும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 27ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகக்கூடும். இது அதற்கடுத்த மூன்று தினங்களில் மேற்கு- வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், 26, 27 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

First published:

Tags: Rain, Weather News in Tamil