"அவர்கள் பணம் கொடுத்துள்ளார்கள்; நாங்கள் அன்பை கொடுத்துள்ளோம்” - தமிழிசை சௌந்தரராஜன்

”இந்த தேர்தல் எங்களது கூட்டணிக்கு மிகுந்த நம்பிக்கையை தருகிறது”

தமிழிசை செளந்தரராஜன்
  • News18
  • Last Updated: April 18, 2019, 2:20 PM IST
  • Share this:
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் எட்டயபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியை பார்வையிட்டார். அவருடன் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் பாஜக அதிமுக தொண்டர்கள் உடன் வந்திருந்தனர்.

பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தூத்துக்குடி மக்களவை மற்றும் விளாத்திக்குளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வாக்களிக்கின்றனர். இந்த தேர்தல் எங்களது கூட்டணிக்கு மிகுந்த நம்பிக்கையை தருகிறது.

நிச்சயமாக நாங்கள் வெற்றி பெறுவோம். இந்தத் தொகுதி மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். நாற்பதும் நமதே, நாளை நமதே, நாடும் நமதே. மக்களுக்கு அவர்கள் பணத்தை வழங்கியுள்ளனர்.


நாங்கள் அன்பையும், நம்பிக்கையையும் வழங்கியுள்ளோம். இந்த தொகுதியில் அடுத்துவரும் 5 ஆண்டுகளுக்கு தேவையான வளர்ச்சிக்கு நாங்கள் நம்பிக்கை கொடுத்துள்ளோம். அவர்கள் அளித்துள்ளது தற்காலிக உதவி. நாங்கள் வழங்கியுள்ளது நிரந்தர உதவி “ எனப் பேசினார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்