முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கலைஞருடைய பிறந்தநாளில் தமிழ் மானம் காக்க சூளுரை ஏற்போம் - கி.வீரமணி

கலைஞருடைய பிறந்தநாளில் தமிழ் மானம் காக்க சூளுரை ஏற்போம் - கி.வீரமணி

 திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

 திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

கலைஞர் தன்னுடைய 14 வயது முதலே தமிழ் கொடிபிடித்து இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தியவர் என்று கி வீரமணி எடுத்துரைத்தார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

கலைஞருடைய பிறந்தநாளில் தமிழ் மானம் காக்க சூளுரை ஏற்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி கூறியுள்ளார். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருணாநிதியின் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தவர், ” தன்னுடைய வாழ்வையே ஒரு போராட்டக் களமாக மாற்றிக் கொண்ட கலைஞர் மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் இருக்கிறார்.

இந்தி எதிர்ப்புக்காக பாளையங்கோட்டை சிறைக்கு சென்று போராடியவர் கலைஞர். மீண்டும் இந்திப் பாம்பு தமிழகத்தில் தலைதூக்குகிறது. தன்னுடைய 14 வயது முதலே தமிழ் கொடிபிடித்து இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தியவர்.

ஆட்சியில் அமர்ந்து இருக்கிறோம் என்கிற ஒரே காரணத்திற்காக இந்தி பாம்பு தலை தூக்குகிறது படம் எடுத்து ஆட நினைக்கிறது. அதனுடைய நச்சுப் பல்லை பிடுங்குவதற்கு கலைஞர் இல்லையே என்று யாரும் கவலைப்பட வேண்டாம். கலைஞரால் செதுக்கப்பட்ட தளபதி ஸ்டாலின் முன்னிலையில் பெரும் போராட்ட களம் உருவாகும்.

இந்தித் திணிப்பு வெறும் அறிக்கைதான் என்று சிலர் சமாதானம் சொல்கிறார்கள். ஆனால் வரும் முன்னர் காப்பது என்பதுதான் வள்ளுவர் வழியில் பெரியார் சொன்ன வழிமுறை. அந்த வழியில் கலைஞருடைய 96-வது பிறந்த நாளில் தமிழ் மானம் காப்போம் என்று நாம் சூளுரை ஏற்போம்” இவ்வாறு கூறினார்.

Also see... கருணாநிதி கற்றுத்தந்த வழியில் உழைத்துப் பெற்ற வெற்றி

Also see...


உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


Also see...


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


First published:

Tags: Anna Arivalayam, DMK Karunanidhi, K.Veeramani