ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

“இரட்டை இல்லை சின்னம் எங்களுக்குதான்” - ஓபிஎஸ் சொன்ன காரணம்!

“இரட்டை இல்லை சின்னம் எங்களுக்குதான்” - ஓபிஎஸ் சொன்ன காரணம்!

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

10 ஆண்டு காலம் மோடி தன்னை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். அதனால் பாஜக போட்டியிட்டால் முழு ஆதரவு அளிப்போம் - ஓபிஎஸ்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளரை அறிவித்த பின்னர் வேட்பாளர் பெயரை அறிவிக்கலாம் என ஒபிஎஸ் தலைமையிலான மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இடைத்தேர்தலில் தனியாக வேட்பாளரை களமிறக்குவோம் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ள நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

குஜராத் மாநிலத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பிய ஓபிஎஸ், நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார். பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன்,  ஜேசிடி.பிரபாகர், புகழேந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மர் மற்றும் ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளரை அறிவித்த பின்னர், வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கோரிக்கைவிடுத்தனர். எனவே இபிஎஸ் வேட்பாளரை அறிவித்த பிறகு வேட்பாளரை அறிவிக்கலாம் என ஓபிஎஸ் தரப்பில் முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், “4.5 ஆண்டு கேட்பாரற்று பணத்தை கொள்ளையடித்துள்ளனர். எம்.ஜி.ஆர் வகுத்த சட்ட விதியை மறைத்து அதை மதிக்காமல் அவர்கள் செயல்படுகிறார்கள். அதை இந்த இடை தேர்தலில் முறியடிப்போம். இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளோம். மக்கள் அனைவரும் எங்கள் பக்கம் உள்ளார்கள்.

அதிமுகவை பொறுத்தவரை கழக சட்ட விதிப்படி நாங்கள் தேர்வு ஆணோம். நாங்கள் இருவரும் சேர்ந்து கையொப்பம் இட்டால்தான் இரட்டை இலை கிடைக்கும். கழக சட்ட விதிக்கு புறமாக தன்னை இடைக்கால பொதுச் செயலாளர் என்று அறிவித்துக் கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி.

இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை இபிஎஸ் ராஜினாமா செய்துவிட்டதால் ஒருங்கிணைப்பாளர் பதவியே அதிகாரமிக்கதாக உள்ளது. உறுதியாக இரட்டை இல்லை சின்னம் எங்களுக்குதான் கிடைக்கும்.

சிலர், ஆள் இல்லதா கடையில் டீ ஆத்துவதாக சொல்கிறார்கள் யார் டீ ஆத்துவது என்பதை ஈரோடு தேர்தல் முடிவு செய்யும். பாஜக  போட்டியிட்டால் நிச்சயம் ஆதரிப்போம். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. 10 ஆண்டு காலம் மோடி தன்னை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். அதனால் பாஜக போட்டியிட்டால் முழு ஆதரவு அளிப்போம்.” என கூறினார்.

First published:

Tags: ADMK, Erode Bypoll, Erode East Constituency, OPS