பாஜகவின் சித்தாந்தத்தை தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்லும் வரை நாங்கள் ஓயமாட்டோம்: பாஜக தலைவர் அண்ணாமலை

அண்ணாமலை

நம் கட்சி பல ஆண்டுகளாக பல காரியகர்த்தாக்களின் உயிர்த் தியாகங்களாலும் மற்றும் பல தன்னலமற்ற தலைவர்களின் தியாகங்களாலும் வழிநடத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    பாஜகவின் சித்தாந்தத்தை தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்லும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க தேர்தலை எதிர்கொண்டது. அ.தி.மு.கவிடம் 20 தொகுதிகள் வாங்கி பா.ஜ.க போட்டியிட்டது. அதில், 4 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றது. இதில், அரவக்குறிச்சியில் போட்டியிட்ட அண்ணாமலை வெற்றி வாய்ப்பை இழந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனிடையே, நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் இணை அமைச்சராக தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து, தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து, இன்று அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "நமது தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா எனக்கு வழங்கி இருக்கும் தமிழக பாஜகவின் தலைவர் எனும் பொறுப்பு என்னை பணிவும், பெருமையும் கொள்ளச் செய்கிறது.



    நம் கட்சி பல ஆண்டுகளாக பல காரியகர்த்தாக்களின் உயிர்த் தியாகங்களாலும் மற்றும் பல தன்னலமற்ற தலைவர்களின் தியாகங்களாலும் வழிநடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள நம்முடைய கட்சியின் மூத்த தலைவர்களின் வழிகாட்டுதலுடன், ஒரு அணியாக, நாம் அனைவரும் ஒன்றிணைந்து, தேசியத் தலைமை என் மீது வைத்துள்ள நம்பிக்கையைப் போற்றும் விதமாக உறுதியுடன் நடப்போம்.

    Also read: ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் வலுவான தலைவரை அதிமுகவால் கொடுக்க முடியவில்லை: எஸ்.ஆர்.சேகர் விமர்சனம்

    அழகான மாநிலமான நம் தமிழகம், பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்ப் பற்றும், நமது தமிழ்ப் பண்பாடு மீது அவர் கொண்டுள்ள பெருமையும் அனைவருக்கும் தெரியும்.

    நம்முடைய கட்சியின் சித்தாந்தத்தையும், உயிரான தேசப் பற்றையும் மற்றும் தமிழ் மக்கள் மீது பிரதமர் கொண்டுள்ள பேரன்பையும், தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்லும் வரை நாங்கள் ஓயமாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published: