Home /News /tamil-nadu /

கலை கல்லூரிகளில் எந்த காரணத்தை கொண்டும் நுழைவுத் தேர்வுகளை அனுமதிக்க மாட்டோம்: அமைச்சர் பொன்முடி

கலை கல்லூரிகளில் எந்த காரணத்தை கொண்டும் நுழைவுத் தேர்வுகளை அனுமதிக்க மாட்டோம்: அமைச்சர் பொன்முடி

பொன்முடி

பொன்முடி

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முதல்வர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் உள்ள கலை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களில் எந்த காரணத்தை கொண்டும் நுழைவுத் தேர்வுகளை அனுமதிக்க மாட்டோம் என உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

    நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வை அனுமதிக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்தார்.

    இதற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதிலளித்து பேசியதாவது, UGC மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு இந்திய அளவில் நடக்கும் என தற்போது தெரிவித்திருக்கிறது. நுழைவுத்தேர்வு எந்த ரூபத்தில் வந்தாலும் அதை முதலமைச்சர் அனுமதிக்கமாட்டார். எந்த காலத்திலும் தமிழகத்தில் உள்ள கலை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு அனுமதிக்க மாட்டோம்.

    திமுக தேர்தல் வாக்குறுதி என்னாச்சு... மு.க. ஸ்டாலின் அதிரடி பதில் 

    இது மட்டுமின்றி கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முதல்வர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இதனை வலியுறுத்தி மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    அதுமட்டுமன்றி மகளிருக்கான சம உரிமை உலகத் தரத்தில் வழங்கப்பட்டு வருகிறது. கல்லூரியின் கட்டமைப்பு வசதிகள் துரிதமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கல்லூரிகளில் சீரமைப்புப் பணிகளை முதல்வர் தன்னுடைய கண்காணிப்பில் நேரடியாக கவனித்து வருகிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Minister Ponmudi, TN Assembly

    அடுத்த செய்தி