தமிழக சட்டப்பேரவையில் இன்றைய விவாதத்தின் போது அமைச்சர் அன்பில் மகேஷ், வரும் கல்வியாண்டில் இருந்து நீதி போதனை வகுப்புகளை முதலில் நடத்திவிட்டே, பின் பாடங்கள் நடத்தப்படும். இன்றைய கால கட்டத்தில் கவனச்சிதறல்கள் அதிகரித்துள்ளது. மன அழுத்தத்தில் இருந்த குழந்தைகளை கட்டுப்படுத்தும் விதத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது
எதற்கெடுத்தாலும் ஆசிரியர்களை குறைகூறுவது தவறு. பள்ளிகள் - பெற்றோர்கள் - அரசு ஆகியோருக்கு கூட்டுப்பொறுப்பு உள்ளது. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால், டிசியிலும், Conduct Certificate-லும் என்ன காரணத்துக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டு, பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என்றார்.
Also Read :
தமிழகத்தில் தீண்டாமையை கடைப்பிடிக்கும் கிராமங்களை கொண்ட மாவட்டங்கள் பட்டியலில் மதுரை முதலிடம்
மேலும் கைப்பேசி பள்ளி வகுப்புகளில் கொண்டு வருவது முற்றிலும் தடுக்கப்படும். இதுபோன்ற மாணவர்கள் பள்ளி வகுப்பில் நடந்துகொண்டால் நிரந்தரமாக பள்ளியிலிருந்து நீக்கப்படுவார்கள். நடத்தை சான்றிதழ் பள்ளியில் இருந்து நீக்கியது குறித்து எழுத்து வடிவில் கொடுப்போம் என்றும் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.