அரசு தரும் ரூ.2,500 பொங்கல் பரிசு டாஸ்மாக் மூலம் திரும்பவும் அரசுக்கே வரும்: அமைச்சர் சீனிவாசன் (வீடியோ)

Youtube Video

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகை 2,500 ரூபாய் டாஸ்மாக் கடை மூலம் மீண்டும் அரசுக்கே கிடைக்கும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  திண்டுக்கல் மாவட்டம் கோம்பையான்பட்டியில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திறந்து வைத்தார். அப்போது கூட்டத்தில் மதுபோதையில் இருந்த ஒருவர் தனக்கு பொங்கல் பரிசு கூப்பன் கிடைக்கவில்லை என அமைச்சரிடம் தெரிவித்தார். இதைகேட்டு சிரித்த அமைச்சர், இதுபோன்ற நபர்களுக்கு வழங்கப்படும் பணம் மீண்டும் டாஸ்மாக் கடை மூலம் அரசுக்கே வந்துவிடும் எனக் கூறினார்.

  பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ 2500 ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை, திராட்சை, முந்திரி, ஏலக்காய் மற்றும் கரும்பு ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை கடந்த 20-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.இதற்காக ரூ 5,604 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: