அரசியல்வாதிகளுக்கு குடும்பம் இடையூறாக இருக்கும்.. நிச்சயம் கமலுக்கு இடையூறாக நாங்கள் இருக்க மாட்டோம் - நடிகை சுஹாசினி

அரசியல்வாதிகளுக்கு குடும்பம் இடையூறாக இருக்கும்.. நிச்சயம் கமலுக்கு இடையூறாக நாங்கள் இருக்க மாட்டோம் - நடிகை சுஹாசினி

சுஹாசினி பிரச்சாரம்

அரசியல்வாதிகள் அனைவருக்கும் குடும்பம் இடையூறாக இருக்கும், நாங்கள் நிச்சயம் கமலுக்கு இடையூறாக இருக்க மாட்டோம் என கோவை தெற்கு தொகுதியில் பிரச்சாத்தின் போது கமலஹாசனின் அண்ணன் மகளும் நடிகையுமான சுஹாசினி தெரிவித்தார்.

  • Share this:
கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் அக்கட்சி தலைவர் கமலஹாசன் போட்டியிடுகின்றார். அவருக்கு ஆதரவாக கூட்டணி கட்சி தலைவரான நடிகர் சரத்குமார் சமீபத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் கமல்ஹாசனுக்கு ஆதரவாக அவரது அண்ணன் மகளும் நடிகையுமான சுஹாசினி கோவையில் முகாமிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். நேற்று தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட சுஹாசினி இன்று பந்தய சாலை பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தவர்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார். துண்டு பிரசுரங்களை விநியோகித்து கமலஹாசனுக்காக அவர் வாக்குகளை சேகரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை மக்கள் செழிப்பாக இருப்பார்கள் என நினைத்தோம். ஆனால் பல. இடங்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருக்கின்றது எனவும் கோவைக்கு வேறு விதமான தோற்றத்தை கொடுத்து இருக்கின்றனர் எனவம் தெரிவித்தார். பிரச்சாரத்தில் வேறு கட்சி பேனர், கொடிகளை பார்க்க முடியவில்லை என தெரிவித்த அவர் நிச்சயமாக எங்க சித்தப்பா கமலஹாசன் வெற்றி பெறுவார் என தெரிவித்தார்.

எல்லா அரசியல் வாதிகளுக்கும் குடும்பம் இடையூறாக இருக்கும், நாங்கள் நிச்சயம் கமலுக்கு இடையூறாக இருக்க மாட்டோம் என தெரிவித்த சுஹாசினி நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டேன் என தெரிவித்தார்.

கோவை தெற்கு தொகுதியில் பிரச்சாரத்தின் போது மக்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட நடிககை சுஹாசினி


சித்தப்பா தான் அரசியலில் இருப்பார் எனவும், அவர் அரசியலில் நல்லவர்களை தேர்ந்தெடுத்து இருக்கின்றார் எனவும் தெரிவித்த சுஹாசினி என்னையும் மணிரத்னத்தையும் கமலஹாசன் தேர்வு செய்யவில்லை என்றார்.

மேலும் படிக்க...  தருமபுரியைத் தொடர்ந்து சென்னை தியாகராய நகரில் உள்ள DNC நிதி நிறுவனத்தில் வருமான வரி சோதனை... கணக்கில் வராத 6 கோடி ரூபாய் இதுவரை பறிமுதல்...

அறிவுடைய மக்களை பற்றி தெரிந்த, மக்கள் சேவை என்னவென்று தெரிந்தவர்களை மட்டும் நிறுத்தி இருக்கின்றார் எனவும் சுஹாசினி தெரிவித்தார்.மேலும் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் சுஹாசினி தெரிவித்தார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: