ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்றாலும் ஆன்மீக அரசியலை முன்னெடுத்து திமுகவை தோற்கடிப்போம் : அர்ஜுன் சம்பத் 

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்றாலும் ஆன்மீக அரசியலை முன்னெடுத்து திமுகவை தோற்கடிப்போம் : அர்ஜுன் சம்பத் 

234 தொகுதிகளில் ரஜினி ஆசியோடு ஆன்மீக அரசியலை முன்னெடுத்து திராவிட அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ளதாக அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்றாலும் ஆன்மீக அரசியலை முன்னெடுத்து திமுகவை தோற்கடிப்போம்  என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.  இந்து மக்கள் கட்சி சார்பில் பொள்ளாச்சியில் வேல் வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்துகொண்டு பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வேல் வழிபாடு நடத்தினார்.

  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ” ரஜினியின் முடிவை இந்து மக்கள் கட்சி வரவேற்கிறது. ரஜினி அரசியல் கட்சி  துவங்கும் அறிவிப்பு திமுகவை தோற்கடிக்கதான் என்றும் அதற்காகதான் ரஜினி, கமல் போன்றவர்களை அரசியல் கட்சிகள் துவங்க வைக்கிறார்கள் என்றும் ஸ்டாலின் வெளிப்படையாகவே பேசினார்” என்று சாடினார்.

  மேலும் ,” ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்தால் அவரது வாக்குகள் பிஜேபிக்கு சென்றால் அதிமுக தோல்வியடையும் என்று நினைத்தார்கள். திராவிட அரசியலின் மோசமான நிலைமையை மக்கள் மனதில் ரஜினி பதிய வைத்துள்ளார்.   அவரது கொள்கைகளை முன்னிறுத்தி திமுகவை தோற்கடிப்போம். 234 தொகுதிகளில் அவர் ஆசியோடு ஆன்மீக அரசியலை முன்னெடுத்து திராவிட அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” என்றார்.

  அதனைத் தொடர்ந்து பேசியவர், “திமுகவின் கிராம சபை கூட்டம், ஸ்டாலினின் அரசியல் நடவடிக்கை ஏற்கனவே கட்சி சார்பற்ற பல நிறுவனங்களை ஆக்கிரமித்து வைத்துள்ளது. கிராம சபை என்பது கட்சி சார்பற்றது. அங்கு எதற்காக அரசியல் செய்ய வேண்டும். கிராமசபை, கூட்டுறவு சங்கங்கள் கட்சி சார்பற்று இருக்க வேண்டும் என அனைவரும் நினைக்கிறார்கள். திமுகவின் இந்த அரசியல் நடவடிக்கை ஜனநாயக அமைப்புகளையும்  நாற்றங்கால்களையும் சிதைக்கும்  வேலை” என்று தெரிவித்தார்.

  மேலும் படிக்க...லோன் ஆப் மூலம் கடன் பெறுபவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்னென்ன?

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Arjun Sampath, Pollachi, Rajinikanth