Home /News /tamil-nadu /

தமிழக அரசை ஸ்டாலின் பாராட்டியது வரவேற்கத்தக்கது: செல்லூர் ராஜூ

தமிழக அரசை ஸ்டாலின் பாராட்டியது வரவேற்கத்தக்கது: செல்லூர் ராஜூ

அமைச்சர் செல்லூர் ராஜூ (கோப்புப் படம்)

அமைச்சர் செல்லூர் ராஜூ (கோப்புப் படம்)

குறை உள்ளபோது அதனை சுட்டிக்காட்டுவதும், சிறந்த பணி மேற்கொள்ளும்போது அதனை வாழ்த்துவதும் அரசிற்கு உற்சாகத்தை தரும் வகையில் உள்ளது என்றார் செல்லூர் ராஜூ.

  • News18
  • Last Updated :
கஜா புயல் தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தது வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை கோச்சடை பகுதியில் கஜா புயல் காரணமாக மரங்கள் சாய்ந்து பாதிப்புக்கு ஆளான இடங்களை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று ஆய்வு செய்தார். அப்போது, அவர் கூறியதாவது: கஜா புயல் தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஸ்டாலின் பாராட்டியுள்ளது வரவேற்கத்தக்கது. இதேநிலை தொடர வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம்.

குறை உள்ளபோது அதனை சுட்டிக்காட்டுவதும், சிறந்த பணி மேற்கொள்ளும்போது அதனை வாழ்த்துவதும் அரசிற்கு உற்சாகத்தை தரும் வகையில் உள்ளது.

நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் எந்த அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரியாத அளவிற்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கஜா புயலை எதிர்கொள்வதில் மாநில அரசும், மத்திய அரசும் இணக்கமாகச் செயல்படுகிறது. புயல் பாதிப்பு குறித்து கணக்கீடு செய்து மத்திய அரசிடம் தமிழக முதல்வர் உதவி கோருவார் என்றார் செல்லூர் ராஜூ.

Also watch

Published by:DS Gopinath
First published:

Tags: Cyclone Gaja

அடுத்த செய்தி