Home /News /tamil-nadu /

பிரதமர் மோடி நல்ல காரியத்திற்காகவே வருகிறார்: அமைச்சர் நாசர்

பிரதமர் மோடி நல்ல காரியத்திற்காகவே வருகிறார்: அமைச்சர் நாசர்

கோப்புப் படம்

கோப்புப் படம்

கடந்த அதிமுக ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகையை திமுக கடுமையாக எதிர்த்தது. கருப்பு கொடி காட்டுதல், கருப்பு பலூன் பறக்கவிடுதல், GO Back Modi என்று சமூக வலைதளத்தில் பதிவிடுதல் என எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தற்போது திமுகவின் பிரதமர் எதிர்ப்பு நிலைபாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
    பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதை வரவேற்கிறோம் என்றும் அவர் நல்ல காரியத்திற்காக வருகிறார் எனவும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழா வரும்  ஜனவரி 12ம் தேதி நடைபெறவுள்ளது.  இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்கவுள்ளார்.

    கடந்த அதிமுக ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தபோதெல்லாம் திமுக சார்பில் கருப்புக்கொடி காட்டப்பட்டது.  தற்போது கருப்புக்கொடி காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதேபோல், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மாநிலத்தில் வந்து திட்டங்களை துவங்கி வைக்கும் பிரதமரை எந்த அரசாங்கமும் வேண்டாம் எனக் கூறாது. இங்கு நமக்கு திட்டங்களின் தேவைக்கு இருக்கு. அரசு என்பது வேறு, கருத்தியல் என்பது வேறு என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில், ஆவடியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  15 வயதுக்கு மேற்பட்ட மாணாக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை தமிழக தமிழக பால் வளத்துறை அமைச்சர் நாசர் இன்று துவங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், மோடி தமிழகம்  வருவதை வரவேற்கிறோம் . அவர் நல்ல காரியதிற்காக வருகிறார் என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: "முதல்வர் நாற்காலியில் நடிகர் அஜித்" மதுரை ரசிகர்களின் சர்ச்சை போஸ்டர்
    Published by:Murugesh M
    First published:

    Tags: DMK, Prime Minister Narendra Modi, Tamilnadu

    அடுத்த செய்தி