கருணாநிதிக்கு 6 அடி இடம் கொடுக்க மறுத்தவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் - மு.க.ஸ்டாலின்

இடைத்தேர்தலில் 22 தொகுதியிலும் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கும் என்று மு.க.ஸ்டாலின் பரப்புரையில் பேசினார்.

news18
Updated: April 16, 2019, 11:58 AM IST
கருணாநிதிக்கு 6 அடி இடம் கொடுக்க மறுத்தவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
news18
Updated: April 16, 2019, 11:58 AM IST
கருணாநிதிக்கு 6 அடி இடம் கொடுக்க மறுத்தவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் பரப்புரையில் பேசினார்.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் கடைவீதியில் நாகை மக்களவை தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.செல்வராசுவை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், கருணாநிதிக்கு 6 அடி இடம் கொடுக்க மறுத்தது இந்த எடப்பாடி அரசு. எப்படிப்பட்ட தலைவர் கருணாநிதி. உலக தமிழருக்கெல்லாம் தலைவர் கருணாநிதி. அவருக்கு இடம் கொடுக்க மாட்டேன் என்று சொன்னவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றார்.


மேலும் கஜா புயல் பாதித்தபோது முதல்வர் ஹெலிகாப்டரில் வந்தார். அற்பணுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்தியில் குடை பிடிப்பான். பிரதமர் ஒருமுறையாவது வந்து பார்த்தாரா. புயலில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். ஒரு ஆறுதல் கூட சொல்லவில்லை. மோடி இந்தியாவின் பிரதமரல்ல வெளிநாட்டின் பிரதமர். நாடாளுமன்ற தேர்தலில் மோடியை அடித்து வெளியே அனுப்ப போகிறோம் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

இதையடுத்து பேசிய மு.க.ஸ்டாலின் , அண்ணா மறைந்தபோது குடவாசலில் இந்த ஆலமரம் நடப்பட்டது. அதன் நிழலில் நின்று பேசுவதை பெருமையாக கருதுகிறேன். இது கருணாநிதியின் மண். அதனால் உங்களிடையே அதிக நேரம் நான் பேச வேண்டியதில்லை.மோடி மற்றும் எடப்பாடி என்கிற கொடுமையில் இருந்து நாம் விடுபட வேண்டும். இடைத்தேர்தலில் 22 தொகுதியிலும் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கும் என்றார்.
Loading...

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also watch

First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...